அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லா பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லா பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாநில அளவில் அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லா பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கல்லூரி முதல்வர் R. சிவக்குமார் தலைமையில் இன்று (11- 5 – 2023) நடைபெற்றது. இப்பயிற்சியில் விழுப்புரம் மாவட்ட கருவூலத்தில் பணிபுரியும் திரு.R. சுதாகர் (கண்காணிப்பாளர்) மற்றும் திரு . V. கீர்த்திவாசன் (கணக்காளர்) ஆகியோர் பங்கு பெற்று IFHRMS மென்பொருளை எவ்வாறு கையாள்வது மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நாட்டுப்புறப் பாடலுடன் இனிதே துவங்கிய இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றோரை கல்லூரியின் கண்காணிப்பாளர் செல்வி.V. பிரேமலதா அவர்கள் வரவேற்று மகிழ்ந்தார் இந்நிகழ்ச்சியில் 38 க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லா பணியாளர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். இந்நிகழ்ச்சி நிகழ்ச்சியை கல்லூரியின் உள்தர உறுதிக் குழு (IQAC)-வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் K.S. சதீஷ்குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். கல்லூரியின் நிதியாளர் காமராஜ் அவர்கள் நன்றியுரை கூறினார்