International Seminar on Recent Advancement in Artificial Intelligent

ஊடகச்செய்தி – 08.04.2023

08.04.2023 அன்று, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், விழுப்புரம், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழிச் சட்ட வாரத்(2022-2023)தை அடியொற்றி, ஆட்சித்தமிழை அதிகம் நடைமுறைப்படுத்துவது  கிராமப் புறங்களிலா? நகர்ப்புறங்களிலா , எனும் தலைப்பில், முனைவர் உரு.அசோகன் அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கமாக ,கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சிவக்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.அதில் ஆட்சித்தமிழின் தனிச்சிறப்புகளையும்  மொழி வளம் காக்க வேண்டிய சூழல்  குறித்தும் , மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாராட்டியும் சிறப்புரை நிகழ்த்தினார்.விழாவின் நோக்கவுரையைத் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர்,திருமதி கு.ப.சத்திய பிரியா அவர்கள்  வழங்கினார். தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் கு.கலைச்செல்வி  அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். வரவேற்புரையைத் தமிழ் வளர்ச்சித்துறைப் பொறுப்பு அலுவலர் தமிழ்ச்செல்வி அவர்கள் நிகழ்த்தினார்கள். விழாவின் நிறைவாகத்  தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் எ.சுசான்மரி நெப்போலியன் நன்றியுரையாற்றினார். பட்டிமன்றத்தில் ஆட்சித்தமிழை அதிகம் நடைமுறைப்படுத்துவது கிராமப்புறமே என்ற அணியில்,மாணவர்கள் கனிமொழி,வாணி, பசுபதி ஆகியோரும்  நகர்ப்புறமே என்ற அணியில் நேரு ,மஞ்சுளா,       சிவராஜ ன்  ஆகியோரும் மிகச் சிறப்பாகத் தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.இந்நிகழ்வில் ஏராளமான கல்லூரி மாணவ  -மாணவியர்கள் கலந்துகொண்டு,ஆட்சித்தமிழின் நடைமுறையாக்கம் குறித்த வரலாற்றை அறிந்து தெளிந்து மகிழ்ந்தார்கள். மேற்கண்ட தகவலைத் தங்களின் மேலான செய்தி இதழில் வெளியிட்டு , மாணவர்களை வழக்கம்போல விழிப்படைந்து செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நான் முதல்வன் திட்டத்தின்படி தளவடங்களுக்கான (Logistics) தமிழ்நாடு திறன் மேம்பாட்டு  மையத்தின் பயிற்சி வகுப்பின் (TNASDC ) ஓர் அங்கமாக இக் கல்லுரியில் பயிலும் இளநிலை மூன்றாம் ஆண்டு  மாணவர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு  முகாம்  இன்று (16-03-2023) நடைபெற்றது. இவ்வேலைவாய்ப்பு முகாமினைக்
கல்லூரி முதல்வர் முனைவர். இரா. சிவக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு முகாமில் 8 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன.  இந்த 8  நிறுவனங்களின் மனித வள அதிகாரிகள்  நேர்காணலில் ஈடுபட்டனர். அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில்  பங்குபெற்ற அனைத்து  மாணவர்களும் (1556 பேர்) தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணி நியமன ஆணை இன்றே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பணி நியமன ஆணை பெற்ற 1556 மாணவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த வேலைவாய்ப்பிற்கான முகாமினை கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சிவக்குமார்,
துறைத்தலைவர்கள் ,பேராசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Poster presentation seminar conducted for commerce and computer science departments 13-03-2023

Intra department Cultural competitions
Department of Mathematics – 13-03-2023

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆய்வுத்திட்டத்தில் தேர்ந்தெடுப்பு. 

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறையில் 2020-2022 ஆம் கல்வியாண்டில் முதுகலைத் தமிழ் படித்த மாணவர்கள் 3 பேர் ஆய்வுத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர். தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகம் “விடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் ” என்னும் தலைப்பில் ஆய்வு செய்ய ஆய்வுத் திட்டம் (Project Work) ஒன்றினை அறிவித்திருந்தது.
இத்திட்டத்திற்கான நேர்காணல் தேர்வு நேற்று (07-03-2023)நடைபெற்றது.இத்தேர்வில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறையைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேர் கலந்து கொண்டனர்.பங்கேற்ற வெ.அஜித்குமார், பெ.பலராமன், க.அன்னபூரணி ஆகிய மூன்று பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இம்மாணவர்கள் ஆய்வுத்திட்டத்தில் ஓராண்டு பணி புரிய வேண்டும். இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ27000 / வழங்கப்படுகிறது.
ஆய்வுத்திட்டத்திற்குத் தேர்வான மாணவர்களை, கல்லூரி முதல்வர் இரா.சிவக்குமார்,
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கு.கலைச்செல்வி மற்றும் பேராசிரியர்கள் முனைவர் சதீஷ்குமார்,
முனைவர் ஆ.அருள்தாஸ்,
முனைவர் கோ.குணசேகர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

சிகரம் தொடும் சிந்தனைகள்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி விழுப்புரத்தில் இண்று காலை (04.03.2023) 10.30 மணி அளவில்

“சிகரம் தொடும் சிந்தனைகள்”

என்ற தலைப்பில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மகளிர் தின நிகழ்ச்சி துவங்கியது.

முதலாவதாக நாட்டுப்புற பாடல் தமிழ் துறை மாணவிகளால் பாடப்பட்டது.

செல்வி.கு. மஞ்சுளா இளங்கலை இரண்டாம் ஆண்டு தமிழ் துறை மாணவி வரவேற்புரை நல்கினார்.

கல்லூரி முதல்வர் முனைவர். இரா.சிவக்குமார் தலைமை வகித்து இன்றைய மகளிரின் முன்னேற்றம், சாதனைகள் மற்றும் சவால்கள் பற்றி எடுத்துரைத்தார்.

தமிழ் துறை தலைவர் முனைவர். கு. கலைச்செல்வி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.

திருமதி. மஞ்சுபாஷினி. C.S யோகா மற்றும் வர்மா ஆலோசகர், சிறப்புரை வழங்கினார்.

திருமதி.M. R.கவிதா அவர்கள் எளிய யோகா பயிற்சி முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

முதலாவதாக மாணவிகளுக்கான எளிய முறை யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

இதனை தொட்ந்து இசை மூலம் மனதை ஒருநிலைப்படுத்த தியானம் செய்யப்பட்டது.

பின் சாதனை பெண்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

செல்வி. ப. யமுனா, வணிகவியல் துறை, இளங்கலை மூன்றாம் ஆண்டு நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சி தொகுப்பு செல்வி. சி. கனிமொழி, முதுகலை முதலாம் ஆண்டு தமிழ்த்துறை வழங்கினார்.

இதில் இக்கல்லூரியைச் சார்ந்த சுமார் 120 மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

அனைத்து துறை பெண் பேராசிரியர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடு பேராசிரியர்கள் ஜே. ஶ்ரீதேவி மற்றும் முனைவர். ச. சுடர்கொடி செய்திருந்தனர்.

கல்லூரி முதல்வர்
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி விழுப்புரம்.

As a part of the International Women’s Day celeberations a Yoga and Meditation Program ‘Sigaram Thodum Sinthanaigal’ was conducted in Arignar Anna Government Arts College, Villupuram on 4.3.23 in the Thiruvalluvar Arangam at 10.30am.
The program started with a prayer song followed by a folk song sung by the Under Graduate students of the Tamil Department.
Selvi. K. Manjula of II B.A Tamil welcomed the gathering.
Principal Dr. R. Sivakumar in his presidential address stated how women achieve success amidst the various struggles and challenges they face in their day to day life. He also highlighted how a mother and guru plays a vital role in moulding the life of the students especially girls.
Dr. K. Kalaiselvi in he felicitations stressed that other than the parents teachers are the only persons who is really proud of the achievements of their students.
Mrs. Manjubashini yoga and Varna Consultant in her Chief Guest’s address insisted how Yoga and Varma is essential for the wellbeing of the youngsters.

The other cheif Guest yoga trainer Mrs. M. R. Kavitha demonstrated simple yogas and also explained how yoga and music meditation acts as a stress buster.
Selvi. B. Yamuna of III B.Com proposed the vote of thanks.
The women faculty members and more than 200 women students made the celebration a grant sucess
The program was organised by Mrs. J.Sridevi, Assistant professor English and Dr. S. Sudarkodi, Assistant professor History.

கல்லூரி களப்பயணம்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம்(NSS) ,விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை இணைந்து இன்று (27/2/2023) நான்முதல்வன்திட்டத்தின்கீழ்,அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் -கல்லூரி களப்பயணம் என்னும் நிகழ்ச்சி நடத்தியது.இந்நிகழ்ச்சியில் கண்டமங்கலம், மாம்பழப்பட்டு கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 10 மேல்நிலைப்பள்ளிகளில் தலா 10 மாணவ மாணவியர்கள் வீதம் 100 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,

மாணவர்கள் இரண்டு அரசு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர், கல்லூரி வாயிலில் பேன்டுவாத்தி இசை முழங்கி,கல்லூரி மாணவ மாணவிகளின் நடனத்துடன், பூங்கொத்து கொடுத்து பள்ளி மாணவர்களை வரவேற்றனர், நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தவர்களை முதுகலைத் தமிழ் மாணவி கனிமொழி வரேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சிவக்குமார் அவர்கள் கல்லூரி பற்றியும்,அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் தலைமையுரை ஆற்றினார். ஆங்கிலத் துறைத் தலைவர் பேரா.இரவி ,பொன்னங்குப்பம் அரசு மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆர்.சேகர்,விழுப்புரம் மாவட.ட இடைநிலை கல்வி வட்டார அதிகாரி கோ.கிருஷ்ணனண், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளின் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் அருள்பிரகாஷ் ஆகியோர் உயர்கல்விக்கான ஆலோசனைகளை வழங்கினர்.பின்னர் கல்லூரியின் துறைகள்,ஆய்வகங்கள்,நூலகம்,மைதானம் முதலியவற்றை நாட்டுநலப்பணித்திட்ட தன்னார்வல மாணவர்கள் வழிகாட்ட பள்ளி மாணவர்கள் சுற்றிப் பார்த்தனர், கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை எடுத்துரைத்தனர், இனிப்பு,காரம்,தேநீர்,மதிய உணவு ,நினைவுப்பரிசு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது,
கல்லூரி மாணவர்களால் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றன்.
முனைவர் வே.விஜயரங்கம் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.இந்நிகழ்ச்சித் தொகுப்பினை நாட்டு நலப்பணித் திட்ட.்ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.குணசேகர. வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் சி.தனம்,முனஐவர் வே.விஜயரங்கம் முனைவர் கோ.குணசேகர் ,முனைவர் சு.சுடர்கொடி,முனைவர் ஜி.சத்யா, பேரா..வி.அரிகரன் ஆகியோர் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி – விழுப்புரம்

மாணவர் தொழில் முனைவோர் – நல முற்றம் – அங்காடி திறப்பு விழா

10.02.2023 – ஊடகச்செய்தி

இன்று (10.02.2023) வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் எங்கள் கல்லூரி, மாணவர் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில், தொழில் முனைவோர் நலமுற்றம் எனும் அங்காடி திறப்புவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நலமுற்ற அங்காடியைக் கல்லூரி முதல்வர் முனைவர். இரா, சிவக்குமார் அவர்கள் திறந்து வைத்து, தலைமையுரை வழங்கினார்கள். வலிமை மிக்க எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை இளையோர்களை உருவாக்கித் தருவதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பையும்,துடிப்புள்ள மாணவர்கள் தொழில் முனைவோறாக எதிர்காலத்தில் வெற்றிக்கொடிகட்டி, உயர்ந்துநிற்கவும், இதுபோன்ற முன்னெடுப்புகள் பேருதவி புரியும் என்றும் வாழ்த்திக் கூறினார்கள்.
அங்காடி திறப்பு விழாவில் கல்லூரி ஆட்சி மன்றக் குழுவினர், மூத்த பேராசிரியப் பெருமக்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியப் பெருமக்கள், அலுவலக அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ – மாணவியர் எனப்பலரும் கலந்து கொண்டு மாணவர் படைப்புகளை வாங்கி ஊக்கப்படுத்தினார்கள். விழா ஏற்பாடுகளை தொழில் முனைவோர் திட்ட அலுவலர்கள் முனைவர்.ரு.அசோகன், முனைவர். ம. சிவராமன் ஆகியோர் செய்திருந்தனர்.. மாணவர்களின் சொந்த முயற்சியில் உருவான பொருட்கள் அனைவரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பேற்கண்ட செய்தியைத் தங்களின் மேலான ஊடகத்தில் வெளியிட்டு, மாணவர்களை வழக்கம்போல ஊக்கப்படுத்தி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

மாபெரும் தமிழ்க் கனவு

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி – ஊடகச் செய்தி

விழுப்புரம் ,அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதன் முதலாக தேசிய மாணவர் படைப்பிரிவு தொடங்கப்பட்டபொழுது அதனை ஏற்று முதன்முதலாக மிகச் சிறப்பாக வழி நடத்தி காட்டிய தேசிய மாணவர் படைப்பிரிவு அதிகாரி நமது இன்றைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் தான் என்பதை பெருமையுடன் கூறி மகிழ்கிறோம்.

மேலும் நமது உயர்கல்வித்துறை அமைச்சரின் ஆசியோடும் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளோடும் இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் நாளில் நடைபெற்ற டில்லி குடியரசு தின விழாவில் நமது தேசிய மாணவர் படை மாணவர்கள் தென்மண்டல அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக நமது கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர் கே. நிதிஷ்குமார் அவர்களும் சீனியர் அண்டர் ஆபீசராக கணினி அறிவியல் துறை மாணவர் கே.சிவஞானமும் பொருளியல் துறை மாணவர் ஆ.சுக்ரிஷ் ஆகியோர் தென்மண்டல அணி பிரிவின் தலைமையை ஏற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

அதாவது புதுவை தேசிய மாணவர் படை குழுவிலிருந்து நமது மாணவர்கள் தென் மண்டல அணிவகுப்பில் தலைமை ஏற்று வழி நடத்தி காட்டியது இதுவே முதல் முறையாகும் .

முன்னமே திட்டமிட்டு,கடுமையாக உழைத்து ,தில்லியில் பல நாட்கள் முகாமிட்டு நல்முறையில் பயிற்சி பெற்று எங்கள் மாணவர்கள் இன்று சாதித்து நிற்கிறார்கள் .

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சரின் வழிகாட்டுதலோடு மாணவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சிவக்குமார் அவர்கள் நன்முறையில் வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது .

தென் மண்டல அளவில் தலைமையை ஏற்று மிகச் சிறப்பான பெயரை எடுத்த நமது மாணவர்கள் நமது உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்களின் இல்லம் சென்று சந்தித்து வணங்கி வாழ்த்து பெற்றனர்.

இதற்கு முன் பலமுறை தில்லி சென்று நம் மாணவர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டாலும் இந்த முறை தென்மண்டல அளவிலான குழுவிற்கு எங்கள் மாணவர்கள் தலைமை ஏற்று மிடுக்காக நடந்து சாதித்ததை தங்களின் மேலான ஊடகத்தில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி விழுப்புரம்
குடியரசு தின விழா
பத்திரிக்கை செய்தி

ஜனவரி 26,
விழுப்புரம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 74வது இந்திய குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப் பட்டது. தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் த.ரமேஷ் வரவேற்புரை வழங்க இவ்விழாவில் கல்லூரி முதல்வர் இரா. சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். கல்லூரியின் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் இந்திய குடியரசு தினம் பற்றியும் மற்றும் மாணவர்களின் தேசபக்தி பற்றியும் எடுத்துரைக்கும் வகையில் குடியரசு தின சிறப்புரை ஆற்றினார். இதில் ஆங்கில துறைத் தலைவர் இரா. ரவி அவர்கள், இயற்பியல் துறை தலைவர் சேட்டு அவர்கள், க. கனகசபாபதி அவர்கள், வேதியியல் துறை தலைவர் கோ. பூபதி அவர்கள், கணினி அறிவியல் துறை தலைவர் சுந்தரவடிவேல் அவர்கள், புள்ளியியல் துறை தலைவர் சச்சிதானந்தம் அவர்கள், விளையாட்டு துறை இயக்குநர் திருமதி ஜோதிப்ரியா மற்றும் பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள், ஆசிரியர் அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் கல்லூரி மாணவர் ஆகாஷ் குழுவினரின் பரையிசை நிகழ்ச்சியும் தேசபக்தி பாடலுக்கு நடனமும் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்க பட்டது.

புரிந்துணா்வு ஒப்பந்தம் TNOU உடன் கையெழுத்தானது

நமது கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக புரிந்துணா்வு ஒப்பந்தம் TNOU உடன் இன்று கையெழுத்தானது. இதன் மூலம் நமது கல்லூரியில் பயிலும் மாணவர்கள், பணிபுரியும் பேராசிரியர்கள் ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பு வசதிகளை (5 ஆண்டுகள்) பகிர்ந்து பயனடைய இயலும்.
முதலமைச்சர் கோப்பைகாண மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து பெண்களுக்கான விளையாட்டு போட்டியில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் சாதனை. முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி திண்டிவனத்தில் நேற்று19.02.2023 நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த 6 அணிகள் பங்கு பெற்றன. இதில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் முதல் இடத்திலும் மாணவர்கள் முதலிடத்தையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். மேலும் முதல் இடத்தை பிடித்த 12 வீரர் வீராங்கனைகளுக்கு தலா ரூபாய் 36 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை கல்லூரியின் முதல்வர் . முனைவர் இரா . சிவக்குமார் அவர்கள் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர் இல்லா பணியாளர்கள் மற்றும் உடற் கல்வி இயக்குனர் ப. ஜோதி பிரியா ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Arignar Anna Government Arts College, Villupuram- 605602.
Students entrepreneurship development cell.
Entrepreneurship development welfare stall opening ceremony

Press release
Dear Sir Vanakkam,
Today a Student’s Entrepreneur’s Welfare Stall was opened in our college campus. The stall was inaugurated by the Principal, Dr.R. Sivakumar in the presence of senior Professors and other teaching and non-teaching staff members. Students from various departments also participated in the programme. Student entrepreneurs presented products made by themselves and sold it in the stall. The products were highly useful to the students as well as members of the staff. The programme was organized by the ED Co-ordinators Dr. R. Asokan and Dr. M. Sivaraman. The student entrepreneurs showed great dedication and involvement in the preparation of the stall and sales of the products. This stall, although a small step, will prove to be a giant leap in developing great student entrepreneurs in the coming future.
Thank you.


பத்திரிக்கை செய்தி

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி விழுப்புரம்
💐💐💐💐💐💐💐💐💐
“ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி”என்ற பொருண்மையில் தமிழக அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில் இன்று 13.02.2023 மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஆட்சியர் அலுவலக அருகேயுள்ள திறந்த வெளி மைதானத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி டாக்டர் எம். ஜீ.ஆர். மகளிர் கலைக்கல்லூரி தெய்வானை அம்மாள் கல்லூரி மயிலம் தமிழ் கல்லூரி கப்பியாம்புலியூர் சிகா கலைக்கல்லூரி அரகண்டநல்லூர் வள்ளியம்மை கலைக்கல்லூரி பேரணி தூய இருதய கல்லூரி ஆகிய கல்லூரிகளின் மாணவர்கள் நாடகம் பாடல் நடனம் வில்லுப்பாட்டு ஆகிய நிகழ்ச்சிகளை வழங்கினர்.
அதிலும் குறிப்பாக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பரதநாட்டியம் விழிப்புணர்வு பாடல் வில்லுப்பாட்டு பறையிசை தனி நடனம் குழு நடனம் என அதிக நிகழ்ச்சிகளை வழங்கி தனி முத்திரை பதித்தனர்.
கலை நிகழ்ச்சிக்கு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சிவக்குமார் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். மேலும் வரலாற்று துறைத்தலைவர் முனைவர் பா. கார்த்திகேயன் அவர்களும் கலந்து கொண்டார். கல்லூரியின் நுண்கலை மன்றம் சார்பில் திருமதி கு. கலைச்செல்வி அவர்கள் திருமதி ஜெ. ஶ்ரீதேவி அவர்கள் மற்றும் முனைவர் கி பிரகாஷ் ஆகியோர் இணைந்து மாணவர்களை கலை நிகழ்ச்சிக்கு தயார் செய்திருந்தார்கள்.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் திருமதி சு. காவேரியம்மாள் அவர்களின் வழிகாட்டலில்
இக்கலை நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய கல்லூரி முதல்வர்களுக்கும் மாணவர்களுடன் வந்திருந்து கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைவதற்கு ஆதரவு வழங்கிய பொறுப்பாசிரியர்கள் அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் முனைவர் இரா. சிவக்குமார் அவர்கள் நன்றி பாராட்டினார்.


International Technical Symposium on Computer Application

Date : 24-06-2022 Venue : Thiruvalluvar Arangam

53-ஆவது கல்லூரி ஆண்டு விழா 09-06-2022 அன்று நடைபெற்றது

ஐம்பதாவது ஆண்டு பட்டமேற்பு விழா 07-06-2022 அன்று நடைபெற்றது இதில் நமது உயர்கல்வி துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்

53-ஆவது கல்லூரி விளையாட்டு விழா 06-06-2022 காலை 9.30 மணிக்கு நடைபெற்றது இதில் நமது கள்ளகுறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி MP., கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Association of Computational Intelligence Innovative Impact(ACI3) National Level Seminar on “Programming Trends”

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் புதிதாக வடிவமைக்கப்பட்ட தடகள ஆடுகளத்தின் திறப்புவிழா மற்றும் அனைத்து துறைகளுக்கு இடையிலான தடகள போட்டி துவக்க விழா இன்று 26.05.2022 நடைபெற்றது. தடகள விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் ஒலிம்பிக் தீபத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பாக பங்கு பெற்ற 29 மாணவ மாணவிகளும் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் சார்பாக பங்குபெற்ற 11 மாணவ-மாணவிகளும் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வந்து இறுதியாக கல்லூரி முதல்வர். இரா. சிவக்குமார் அவர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டு தடகள போட்டியை துவக்கி வைத்தார். விழாவில் அனைத்துத்துறை தலைவர்களும் பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். உடற்கல்வி இயக்குனர் ப. ஜோதி பிரியா அவர்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

Statistics Association Organizes a One Day International Workshop on “Meta-analytic Methods for Research in Epidemiology and Genetic Epidemiology”

மாணவர்களுக்கான புகையிலை விழிப்புணர்வு கருத்தரங்கம்

Date: 17.05.2022 Time: 10.00 am

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து கருத்தரங்கம் 16.05.2022 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது

வரலாற்று துறையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தொல்லியல் கண்காட்சி

Date : 12.5.22 & 13.5.22 Place : Thiruvalluvar Arangam

TANSCHE SPONSORED IN-SERVICE TEACHER TRAINING PROGRAM IN TAMIL

Zone: Vellore Venue: Thiruvalluvar Arangam Date: 05-05-2022 & 06-05-2022

Commerce department Association celebrations and Seminar on ‘ Interactive session on career options for commerce’

held on 22.04.2022

FACULTY DEVELOPMENT PROGRAMME (FDP)

Revised Accreditation Framework: Understanding and Challenges

Date: 19-04-2022 at 11.00 am

Resource Person:
Prof. N.C. Chandrasekaran, Retd. PRINCIPAL, Kandaswami Kandars College, Velur,Namakkal – 638 182

NO SHADOW DAY – 2022

DEPARTMENT OF PHYSICS CONDUCT ON 21-04-2022

NSS Program held at Pidagam, Villupuram

Arignar Anna Government Arts College, Villupuram.

Department of Economics

திருவள்ளுவர் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான ஆண்கள் மல்லர் கம்பம் போட்டி விழுப்புரம்,அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. நமது கல்லூரியின் இளங்கலை பொருளியல் இரண்டாம் ஆண்டு மாணவர். எம். ஹேமச்சந்திரன் முதலிடத்தைப் பிடித்து 03.04 .2022 முதல் 06.04 .2002 வரை ஹனுமந்தர் ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீ குஷால் தாஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மல்லர் கம்பம் போட்டியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பாக பங்குபெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று நமது கல்லூரிக்கும் நமது விழுப்புரம் மாவட்டத்திற்கு நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்

Affiliated to Annamalai University, Annamalai Nagar

Arignar Anna Government Arts College, Villupuram

Inauguration of interdepartmental cricket competitions along with joint director Vellore.

All India Inter university Mallkhamb men tournament held at Rajasthan state .Our college student M Hemachandiran BA Economics Secured Gold Medal for this tournament

Chess Competition on 06/04/2022

Zoological Association Day & Workshop on Geological Times Scale & overview – 2022

வேலைவாய்ப்புக் குழு மற்றும் உள் தர உறுதி குழு சார்பாக சிறப்பு கருத்தரங்கம்

தேசிய நுகர்வோர் தினவிழா/உலக நுகர்வோர் தினவிழா ஒட்டி விழுப்புரம் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி,கட்டுரைப் போட்டி,கவிதைப்போட்டி 03-03-2022 அன்று நடைபெற்றது.இப்போட்டிகளில் நமது அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவியர்கள் சரஸ்வதி ( II B.Sc Computer Science) ஓவியப்போட்டியில் முதல் பரிசு ரூ.3000,சந்தியா (I M.Sc Maths) கட்டுரைப்போட்டியில் மூன்றாம் பரிசு ரூ.1500 ஆகியோர் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்

திருவள்ளுவர் பல்கலைக்கழக கடலூர் மண்டல அளவிலான பெண்கள் கைபந்து போட்டியில் முதல் இடத்தை பிடித்து, மண்டலங்களுக்கு இடையேயான போட்டியிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்து, திருவள்ளுவர் பல்கலைக்கழக அணியின் சார்பாக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் வித்தியா, காவியா, யமுனா ,ஸ்ரீமதி, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் நடைபெறும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்குபெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான ஆண்களுக்கான பூப்பந்து போட்டி திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர் செல்வன் G. சிவனேசன் புள்ளியல் துறை மூன்றாம் ஆண்டு வெற்றி பெற்று சாதனை படைத்தார். இவர் சென்னை அப்துல் ரஹ்மான் இன்ஸ்டியூட் ஆஃப் கிரசன்ட் கல்லூரியில் 10-03-2022 அன்று நடைபெற உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பூப்பந்து போட்டியில் பங்குபெறும் பொருட்டு விழுப்புரம், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சிவக்குமார் அவர்கள் மற்றும் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ச. மகாவிஷ்ணு மற்றும் ஏனைய பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ப. ஜோதிபிரியா ஆகியோர் மாணவரைப் பாராட்டி, மேலும் சாதனைப் படைக்க, வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

International Women’s Day @ 2022

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் இன்று 22.03.2022
காலை 10.30 மணிக்கு சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமினை கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சிவக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி இரத்த வங்கி சமூகப் பணியாளர் முனைவர் வெ.அசோக் குமார் அவர்கள் தலைமையில் இரத்த சேகரிப்பு குழு மாணவர்களிடம் இரத்த வகையினை கண்டறிந்து பின்னர் சேகரிப்பு பணியை செய்தனர்

PG & Research Department of Botany

Botanical Association function & Seminar

Arignar Anna 51st Remembrance Day (03-02-2022)

Republic Day on 26-01-2022

Independence Day on 15-08-2021

International Webinar

Sports

NCC

NSS

Library

College Infrastructure

Office Staff